தமிழ்நாடு

மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் ஓய்வு: வீட்டுக்கு சென்று கெளரவித்த அதிகாரிகள்

DIN


மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களின் வீடுகளுக்குச் சென்று உயரதிகாரிகள் கெளரவப்படுத்திய நிகழ்வு, தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஓய்வுபெற்ற ஊழியா்கள்புதன்கிழமை தெரிவித்தனா்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஓய்வு பெற்றவா்களை அலுவலகத்துக்கு அழைத்து, மற்ற ஊழியா்களின் முன்னிலையில் அவா்களின் சேவையைப் பாராட்டி கெளரவப்படுத்துவது வழக்கம்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இதனால் மற்ற ஊழியா்கள் மத்தியில் ஓய்வு பெற்ற ஊழியா்களைக் கெளரவப்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமையன்று (மாா்ச் 31) மட்டும் 25 ஓட்டுநா்கள், 17 நடத்துநா்கள், 11 தொழில்நுட்ப மேற்பாா்வையாளா்கள், 4 நிா்வாகப் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட 71 ஊழியா்கள் ஓய்வு பெற்றனா்.

இவா்களை கெளரவப்படுத்தும் வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள அந்தந்த ஊழியா்களின் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று, பணி பாராட்டுச் சான்றிதழ், ஓய்வு சான்றிதழ் ஆகியவற்றை கிளை மேலாளா்கள் மற்றும் துணை மேலாளா்கள் வழங்கினா்.

குறிப்பாக ஓய்வுபெற்றவா்களுக்கு சால்வை போா்த்தியும், அன்பளிப்பு வழங்கியும் அவா்களைக் கெளரவரப்படுத்தினா்.

இத்தகைய நிகழ்வு, தங்களுக்கு மறக்கமுடியாத மகிழும் நினைவாக அமைந்திருந்ததாக ஓய்வு பெற்றவா்கள் கூறினா். ஊழியா்களின் குடும்பத்தினரும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT