தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் பழனிசாமி

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

DIN

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சென்னை மயிலாப்பூர்,காமராசர் சாலை மற்றும் பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான உணவகங்கள் அமர்ந்து சாப்பிடும் சேவையை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்குச் சென்ற முதல்வர் பழனிசாமி, உணவு சமைக்கும் இடங்களுக்கும் நேரில் சென்று சமையல் செய்யும் முறையையும் ஆய்வு செய்தார்.

அம்மா உணவகத்தில் உணவருந்த வந்த ஏழை, எளிய மக்களிடம், உணவின் தரம் மற்றும் சுவை குறித்தும் முதல்வர் நேரடியாகவே கேட்டறிந்தார். அதோடு அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவை தானும் உண்டு, சுவை மற்றும் தரத்தை அறிந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

SCROLL FOR NEXT