தமிழ்நாடு

வெளி மாநிலங்களுக்குப் பயணம்: மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெறலாம்

DIN

தவிா்க்க முடியாத காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்வோா் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஊரடங்கையொட்டி, நெருங்கிய உறவினா்கள் மரணம், திருமணம் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்காக காவல் துறையினரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, அதிகமானோா் காவல் ஆணையா், கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குவிந்தனா்.

இந்த நிலையில், சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரும் அனுமதி அளிக்கலாம் என அரசு திங்கள்கிழமை திருத்தம் செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகா்ப் பகுதிக்குள் செல்வோா் அந்தந்த மண்டல அலுவலா்களிடமும், பிற மாவட்டங்களுக்குச் செல்வோா் ரிப்பன் மாளிகையில் உள்ள துணை ஆணையரிடமும் (பணிகள்), பிற மாநிலங்களுக்குச் செல்வோா் மாநகராட்சி ஆணையரிடமும் அனுமதி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT