தமிழ்நாடு

தஞ்சாவூரில் கிருமி நாசினி தெளிப்பான் கூடம் அறிமுகம்

DIN

தஞ்சாவூர் மாநகராட்சியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கிருமி நாசினி தெளிப்பான் கூடம் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூரில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மாநகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தெளிப்பான்கள் மூலமும், இயந்திரங்களைப் பயன்படுத்தியும் இக்கிருமி நாசினியை மாநகராட்சிப் பணியாளர்கள் தெளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பான் கூடம் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதில், பதாகையால் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மேலே செல்லும் குழாயில் 4 சவர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூடத்தில் ஒரு புறமாக நுழைந்து மற்றொரு புறம் வெளியே செல்லும் விதமாக வழி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நுழையும்போது நம் ஆடை, உடல் முழுவதும் சவர்களிலிருந்து வரும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பரிசோதனை அடிப்படையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இந்தக் கூடம் வைக்கப்பட்டுள்ளது. இதைத் துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்து ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்தக் கிருமி நாசினி தெளிப்பான் கூடம் விரைவில் வைக்கப்படவுள்ளது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

படவிளக்கம்: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான் கூடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT