தமிழ்நாடு

நெல்லையில் கரோனா பாதிப்பு 36ஆக உயர்வு 

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 36ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இதில் தனிமை சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு பிரிவு, ஆய்வு மையம், வெளி நோயாளிகள் பிரிவு ஆகியவை இயங்கி வருகிறது. தற்போது வியாழக்கிழமை வரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

வியாழக்கிழமை 9 பேருக்கு ரத்த மாதிரிகள் கரோனா நோய்தொற்றுக்கான பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதில், 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை எனவும், 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. இவர்கள் 6 பேரும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து திருநெல்வேலியில் கரோனா பாதிக்கப்டட்டோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட 3 பேரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கரோனா கண்காணிப்பு பிரிவில் 30 வயது இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT