தமிழ்நாடு

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சிக் கடைகளுக்கு சீல்வைப்பு

DIN

சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மகாவீர் ஜெயந்தியான வரும் திங்கள் கிழமை மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக சென்னையில் நாளை முதல் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடப்படும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளபோதும் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பலசரக்கு, இறைச்சி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திறக்கப்பட்டுள்ள பலசரக்கு, இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் இந்த உத்தரவு மீறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT