முகப்பு
தமிழ்நாடு

போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் பலி

செங்கல்பட்டில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் பலியானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:22 PM
கோப்புப் படம்
பகிர்:

செங்கல்பட்டில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் பலியானார். 

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள், பாா்கள் அடைக்கப்பட்டுள்ளன. திடீரென மதுக்கடைகள் 21 நாட்களுக்கு அடை க்கப்பட்டதால் மது அருந்துவோா் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். 

இதையடுத்து, கிராமப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம், கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த ஓட்டுநர் சிவராமன் பலியானார். 

Advertisement

ஏற்கெனவே நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷஷை கலந்து குடித்த 2 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments