முகப்பு
தமிழ்நாடு

சென்னை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னையில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

சென்னை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னையில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

சென்னையில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுபோல, தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 571 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் பலியாகினர். 

இந்த நிலையில் சென்னை அசோக் நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள பொதுசுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் வானகரத்தில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த 16/03/20 வரை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனோ வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
முழு கட்டுரையைப் படிக்க →