முகப்பு
தமிழ்நாடு

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி விடுதிகளை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள விருப்ப மனு

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இரு விடுதிகளை கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நோயாளிகளுக்கு

தமிழ்நாடு

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி விடுதிகளை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள விருப்ப மனு

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இரு விடுதிகளை கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நோயாளிகளுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இரு விடுதிகளை கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகவும் அரசு பயன்படுத்தி கொள்ள விருப்பம் தெரிவித்து டி.ஜெ.எஸ் கல்வி குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி,தொழில்நுட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலரும் டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு விருப்ப மனுவை அளித்துள்ளார்.

அதன்படி டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி,  மற்றும் இரு விடுதிகளை கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கவும், நோயாளிகள் சிகிச்சை பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விருப்பம் தெரிவித்ததோடு, மாவட்டதில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர், காவல் துறையினர் அனைவருக்கும் டி.ஜெ.எஸ் கல்வி குழுமம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கல்லூரியில் உள்ள ஆண், பெண் இரு விடுதிகளில் காற்றோட்ட வசதியுடன் 30அறைகள் உள்ள நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதாவும், விடுதிகளை ஒட்டி தனியாக சமையல் கூடம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.

இது குறித்து டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜனிடம் கேட்ட போது மனித சமுதாயமே கரோனா தொற்றால் பெரிய ஆபத்தான இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இந்த தொற்று பாதிப்பு பரவாமல் பாடுபடும் சுகாதார துறையினர் காவல்துறையினரை போல் நம்மால் சேவை செய்ய முடியாது, அதே சமயம் இதற்காக நம்மால் இயன்றதை நிச்சயம் செய்யவேண்டும் என்ற நோக்கில் கல்லூரி, விடுதியை கரோனா தொற்று பணிகளுக்காக அரசிற்கு வழங்க விருப்பம் தெரிவித்து மனு அளித்ததாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →