முகப்பு
தமிழ்நாடு

கரோனா: சங்ககிரியில் வாரச்சந்தை தற்காலிகமாக மூடல்

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள வாரச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு

கரோனா: சங்ககிரியில் வாரச்சந்தை தற்காலிகமாக மூடல்

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள வாரச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள வாரச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

அதனையடுத்து சங்ககிரியில் உள்ள கடைகள், தற்காலிகமாக சாலையோரம் போடப்பட்டுள்ள காய்கறிகடைகளில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கும் கூலித்தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் சங்ககிரி பேரூராட்சி மூலமாகவோ, பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ மற்ற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்ற மாதிரி குறைந்த விலைக்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நடமாடும்  அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள வாரச்சந்தையை பயன்படுத்தி சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பொதுமக்கள், அருகில் உள்ள ஊராட்சிகளான ஐவேலி, மாவெளிபாளையம், வடுகப்பட்டி, சன்னியாசிப்பட்டி, சின்னாகவுண்டனூர், தேவண்ணகவுண்டனூர், மலையனூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்று கூடும் வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கி சென்று வந்தனர். இந்நிலையில் மத்திய, மாநிலரசுகள் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக  பல்வேறு முன்னெச்செரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து  சமூக இடைவெளிகளை பொதுமக்கள் கடைபிடிப்பதற்காக  சங்ககிரி நகரில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை மூடப்பட்டன.

இதனையடுத்து அனைத்து வாகனங்களும் இயங்காமல் இருந்தன.  இதனையடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி காய்கறி வாகனங்கள் சென்று வர அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை பயன்படுத்தி வாகனங்கள் வைத்துள்ள கடைக்காரர்கள் ஈரோடு, பவானி, குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் தினசரி கூடும் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகள் குறைவான விலைக்கு வாங்கி வந்து  விற்று வந்தனர். தற்போது சங்ககிரி நகர் முழுவதும் சாலையோரம் தற்காலிக கடைகள் அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை சங்ககிரி நகர் பகுதியில் காய்கறி விற்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு நாளுக்கு நாள் விலையை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை ஒரு தேங்காய் ஒன்று ரூ.20, கிலோ ஒன்று வெண்டைக்காய் ரூ.60, தக்காளி ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.50, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.60, பீர்கங்காய் 60, அவரை ரூ.60, புடலங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.80, இரண்டு எண்ணிக்கை கொண்ட முருங்கைகாய் ரூ.10, வெங்காயம் ரூ.80 என்று விற்பனை செய்து வருகின்றனர்.  சங்ககிரி நகர் பகுதியில் உள்ளகூலித்தொழிலாளர்கள் லாரி தொழிலை சார்ந்து உள்ளனர்.  லாரிகள் வெளி மாநிலங்களுக்கு சுமைகளை எடுத்துச்செல்ல புறப்பட்டு செல்லாததால் அந்தந்த பகுதியிலே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூலித்தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே அரசு உத்தரவுகளுக்கு கிணங்க உள்ளடங்கி உள்ளனர். 

தற்போது அவர்களுக்கு பணம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ள நிலையில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலைகள் அதிகரித்து கொண்டே செல்வதால் காய்கறிகள் வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.  சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட காவிரி ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி தேவூர், காவேரிப்பட்டி, அரசிராமணி,  கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பீர்கங்காய், முருங்கைகாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்களை உற்பத்தி செய்து ஒவ்வொரு நாளும் விவசாயிகள் ஈரோடு, குமாரபாளையம் சந்தைக்கு நேரடியாகவும், வியாபாரிகள் மூலமாகவும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.  

இதனை பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தேவூர்பகுதி விவசாயிகளின் சந்தையை உள்ளூரிலேயே விரிவுப்படுத்த எண்ணி சங்ககிரியில் புதிய பேருந்து நிலையம் அமைத்த பின்னர்  பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உழவர்சந்தை திடல்களை அமைத்தது. பின்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் முறையாக அதனை பின்பற்றாமல் உழவர் சந்தைக்காக அமைத்த திடல்களை 20 கடைகளாகவும, ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கும் வாடகைக்கு விட்டுள்ளனர்.  உழவர் சந்தைகளை தொடர்ந்து நிர்வகித்து வந்திருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கு நிலைமைக்கு பொதுமக்களுக்கு குறைவான விலைக்கு விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கிடைத்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

சங்ககிரியில் தற்போது நாளுக்குநாள் ஏறி வரும் காய்கறிகளின் விலையேற்றத்தை தவிர்க்க தேவூரிலிருந்து விவசாயிகள் நேரடியாக நகருக்கு வந்து விற்பனை செய்ய தற்காலிக உழவர் சந்தையை  ஏற்படுத்த வேண்டும் அல்லது மற்ற ஊர்களில் உள்ளது போல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து பேரூராட்சி நிர்வாகம் மூலமாகவோ, சங்ககிரியில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் மூலமாக குறைவான விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் காய்கறிகள் அங்காடிகளை ஏற்படுத்த மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்ககிரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பின் செயலர் ஏ.ஆனந்தகுமார் கூறியது:-
சங்ககிரியில் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யும் ஒரு சந்தையை அரசு உருவாக்க வேண்டும். தேவூரில் இருந்து விவசாயிகள் வந்து செல்வதற்கும் அவர்களது விளை பொருள்களை நகருக்கு கொண்டு வருவதற்கு போதிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தால் நகரில் தினசரி அதிகரித்து வரும் காய்கறிகளின் விலைஏற்றத்தை கட்படுத்த முடியும்.  காய்கறிகளின் விலைகள கட்டுப்படுத்தினால் சங்ககிரி லாரி மற்றும் கட்டுமான தொழில்களை சார்ந்துள்ள தினசரி கூலித்தொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →