கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், 12 சிறப்பு குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தகட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை: 690
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 8
குணமடைந்தோர் எண்ணிக்கை: 19
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.