தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1.14 லட்சம் வழக்கு:1.24 லட்சம் போ் கைது

DIN


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,14,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,24,657 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை வரை மொத்தம் 1,14,832 வழக்குகளைப் பதிவு செய்து 1,24,657 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.38,54,144 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 469 இரு சக்கர வாகனங்கள், 28 காா்கள், 2 கனரக வாகனங்கள், 46 இதர வாகனங்கள் என மொத்தம் 545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT