முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் கார்களும் பறிமுதல்: நோயாளிகள் தவிப்பு!

கரோனோ தொற்றுநோய் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:


கரோனோ தொற்றுநோய் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கிறது.

அத்தியவசிய தேவைகள் தவிர மற்றவர்கள் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே ஈரோட்டில் இன்று காலை முதல் அரசு மருத்துவமனை சந்திப்பு, பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, மூலப்பாளையம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையின்போது தடை உத்தரவை மீறி கார்களில் பயணம் செய்தவரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுமார் 150-க்கும் மேற்பட்ட கார்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கார்களில் மருத்துவமனை செல்வதற்காக வந்த நோயாளிகளின் கார்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த ஆவணங்களை கூட பார்க்காமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்து,  சில நோயாளிகளில் கார்களை பறிமுதல் செய்தனர். 

இதற்கிடையே ஈரோடு அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருடைய இதய நோயாளியான உறவினரை ஒரு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் மருத்துவ சான்றிதழ்களை பார்க்காமல் வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்தனர். 

இதற்கிடையே நோயாளி அதே இடத்தில் மயக்க நிலை அடைந்ததை அடுத்து அவர் காவல்துறையினர் மருத்துவ சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு விடுவித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் அபாய கட்டத்தில் இருப்பதால் கோவை அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள்கூறினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாக்குவாதம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் புகார் செய்து விட்டு கோவை புறப்பட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →