முகப்பு
தமிழ்நாடு

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா

தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 பேர்.

இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்று ஊருக்குத் திரும்பிய அம்மாபேட்டையைச் சேர்ந்த 51 வயது நபரின் 28 வயதுடைய மகன், 21 வயதுடைய மருமகள், 8 மாத பேத்தி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இதேபோல, தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அதிராம்பட்டினம் நபரின் 20 வயது மகனுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →