தமிழ்நாடு

நாட்டுப்படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம்: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'ஊரடங்கு காலத்தில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை. அதே நேரத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம்.

மீன்பிடி இயங்குதளம், துறைமுகம், கடற்கரைப் பகுதிகளால் மீன்களை பொது ஏலத்திற்கு விடக்கூடாது. மீன் பிடித்தல், மீன் இறக்குதல் உள்ளிட்டவைகளுக்கு குறைந்தபட்சம் ஆள்களையே ஈடுபடுத்த வேண்டும்.

படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்குத் தேவையான முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 

ஒரு நாளில் எத்தனை படகுகள் மீன் பிடிக்கச் செல்லலாம் என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முடிவு செய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

நடிகர் ரஜினியை சந்தித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழு!

எந்த வயது வரை தாய்மைப்பேறு அடையலாம்?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT