தமிழ்நாடு

கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

DIN

கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கரோனா வைரஸால் முழு உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவோ தமிழ்நாடோ விதிவிலக்கல்ல.

உங்களை பிரிந்து வாழும் உங்கள் உறவினர், உங்கள் குடும்பத்தினருக்கு சதா நேரமும் உங்களை பற்றிதான் சிந்தனை. உங்களை பற்றிதான் கவலை. நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ, அந்த நாட்டு அரசு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து உங்களை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள்.

இதுதான் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப் பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீங்க. இதுவும் கடந்து போகும். இவ்வாறு வீடியோவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT