தமிழ்நாடு

சீர்காழியில் 70க்கும் மேற்பட்டோர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இணைப்பு

DIN

சீர்காழி காவல் நிலையத்தில் போலீசாருக்கு உதவியாக 70க்கும் மேற்பட்டோர் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முகக்கவசம், சீருடை வழங்கப்பட்டது. 

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் இன்று 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இணைத்துக்கொண்டனர். நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் காலை 6 மணி முதல் 1 மணி வரை அத்தியாவசிய தேவைகளை வாங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும் போக்குவரத்து இவைகளை ஒழுங்குபடுத்தவும் சமூக இடைவெளியை அனுசரிக்க போதிய காவலர்கள் இல்லாததால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாராக 70-க்கும் மேற்பட்டோர் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் முன்னிலையில் தங்களை காவல் பணியில் இணைத்துக் கொண்டனர். 

அப்போது அவர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் பணி செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். ஒவ்வொருவருக்கும் 3 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பொதுமக்கள் சமூக இடைவெளியில் நோய் பரவாமல் தடுக்க உதவியாக பணியில் ஈடுபடுத்தி கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT