கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கரோனா தொற்று காரணமாக, நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி, அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல், தேவையின்றி சாலையில் வாகனங்களில் சுற்றித் திரிந்த 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுபோல ஊரடங்கை மீறி வெளியே வந்த சுமார் 1 லட்சத்து 94 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறியவர்கள் என 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.