முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரம்

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரம்

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில் நேற்று 49 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 375 ஆக உள்ளது. கடந்த 2 நாள்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15-ஆகவே தொடா்கிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 53 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் திருவிக நகர் பகுதியில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் புதிதாக 7 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. 

மண்டல வாரியாக..
திருவொற்றியூர் - 5
மணலி - 0
மாதவரம்- 3 
தண்ட்டையார்பேட்டை - 26
ராயபுரம் - 73
திருவிக நகர் - 34
அம்பத்தூர் -  0
அண்ணா நகர் - 24
தேனாம்பேட்டை - 19
கோடம்பாக்கம் - 26
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 3
அடையார் - 7
பெருங்குடி - 7
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1

முழு கட்டுரையைப் படிக்க →