தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2.45 லட்சம் வழக்குகள்: 2.60 லட்சம் போ் கைது

DIN

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2 லட்சத்து 45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 2 லட்சத்து 60,566 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கு

உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 2 லட்சத்து 45,097 வழக்குகளைப் பதிவு செய்து 2 லட்சத்து 60,566 பேரை கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 2 லட்சத்து 19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு மீறல், போக்குவரத்து விதிமீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.1 கோடி 36 லட்சத்து 1,694 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, கடந்த வாரம் முதல் உரிமையாளா்களிடம் போலீஸாா் ஒப்படைத்து வருகின்றனா்.

சென்னை:

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 126 இரு சக்கர வாகனங்கள், ஒரு காா், 11 ஆட்டோக்கள் என மொத்தம் 138 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT