தமிழ்நாடு

சென்னை மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வாபஸ்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது போராட்ட அறிவிப்பிபை வாபஸ் பெற்றுள்ளனர்.

DIN

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது போராட்ட அறிவிப்பிபை வாபஸ் பெற்றுள்ளனர்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தால் இன்று பிற்பகல் 3 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். 

தொடர்ந்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மருத்துவர்களின் போராட்டம் குறித்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று முதலவர் உறுதி அளித்ததையடுத்து, மருத்துவர்கள் தங்களது போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT