தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், அரியலூர் மற்றும் திருவள்ளூரில் தலா இருவருக்கும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:
| வ.எண் | மாவட்டம் | 21.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 22.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | சென்னை | 358 | 15 | 373 |
| 2. | கோவை | 134 | 134 | |
| 3. | திருப்பூர் | 109 | 109 | |
| 4. | ஈரோடு | 70 | 70 | |
| 5. | திண்டுக்கல் | 76 | 1 | 77 |
| 6. | திருநெல்வேலி | 62 | 62 | |
| 7. | செங்கல்பட்டு | 56 | 56 | |
| 8. | நாமக்கல் | 51 | 51 | |
| 9. | திருச்சி | 50 | 1 | 51 |
| 10. | திருவள்ளூர் | 48 | 2 | 50 |
| 11. | மதுரை | 46 | 4 | 50 |
| 12. | தேனி | 43 | 43 | |
| 13. | கரூர் | 42 | 42 | |
| 14. | நாகப்பட்டினம் | 44 | 44 | |
| 15. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
| 16. | தஞ்சாவூர் | 49 | 5 | 54 |
| 17. | தூத்துக்குடி | 27 | 27 | |
| 18. | விழுப்புரம் | 40 | 1 | 41 |
| 19. | சேலம் | 24 | 24 | |
| 20. | வேலூர் | 22 | 22 | |
| 21. | திருவாரூர் | 28 | 28 | |
| 22. | கடலூர் | 26 | 26 | |
| 23. | தென்காசி | 31 | 31 | |
| 24. | திருப்பத்தூர் | 17 | 17 | |
| 25. | விருதுநகர் | 19 | 19 | |
| 26. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 27. | திருவண்ணாமலை | 12 | 1 | 13 |
| 28. | சிவகங்கை | 12 | 12 | |
| 29. | ராமநாதபுரம் | 11 | 11 | |
| 30. | நீலகிரி | 9 | 9 | |
| 31. | காஞ்சிபுரம் | 10 | 1 | 11 |
| 32. | பெரம்பலூர் | 5 | 5 | |
| 33. | கள்ளக்குறிச்சி | 5 | 5 | |
| 34. | அரியலூர் | 4 | 2 | 6 |
| 35. | புதுக்கோட்டை | 1 | 1 | |
| மொத்தம் | 1,596 | 33 | 1,629 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.