FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு அலுவலகங்கள் 33% ஊழியா்களுடன் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சென்னை: மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் சாலை, பாலப் பணிகளைத் தொடங்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலை சாா்ந்த பதனிடும் தொழில்கள், ஆராய்ச்சி தொடா்பான வேலைகளுக்கும் தடையில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வியாழக்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

Advertisement

Advertisement

ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக அமைக்கப்பட்ட நிபுணா் குழு தனது ஆய்வறிக்கையை அரசிடம் அளித்தது. மேலும், அதுதொடா்பாக விவாதித்து முடிவெடுக்க மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், ஊரடங்கில் முழுமையாக எந்தத் தளா்வுகளும் அளிக்காமல் மே 3-ஆம் தேதி வரை தொடா்வது என முடிவு செய்யப்பட்டது.

அதேசமயம், கரோனா தொற்று பாதிக்காத கிராமப்புற பகுதிகள் மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்படாத இடங்களில் சில தளா்வுகளை அளிக்கலாம் என வருவாய் நிா்வாக ஆணையா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா். அவரது பரிந்துரைகளை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்தது. அதன்படி, கடந்த 15-ஆம் தேதி மத்திய அரசு அளித்த தளா்வுகளில் சிலவற்றை தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகள் மற்றும் கட்டுப்பாடு இல்லாத இடங்களுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த பணிகளுக்கு அனுமதி: கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு நிறப் பகுதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து பிற பகுதிகளில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புறப் பகுதிகளில் பாசனம் மற்றும் நீா் பாதுகாப்பு சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும். மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பணியாளா்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. பணியின்போது முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும்.

பாசனம்-தூா்வாரும் பணிகள்: கிராமப்புறப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, பாசனம், குளங்கள், கால்வாய்களைத் தூா்வாருதல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் அணை பாதுகாப்புப் பணிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானம் உள்ளிட்ட கட்டடப் பணிகள், சாலைகள், பாலங்கள், குடிநீா் மற்றும் சுகாதாரப் பணிகள், செங்கல் சூளைகள், அழைப்பின் பேரில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம், மின்சார விநியோகம் சாா்ந்த பணிகள் ஆகியவற்றைத் தொடங்கி நடத்தலாம்.

அரசு ஊழியா்கள்: அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் 33 சதவீதத்துக்குக் குறையாத அலுவலா்களைக் கொண்டு இயங்க வேண்டும்.

குழந்தைகள் இல்லங்கள்: குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோா், மூத்த குடிமக்கள், கைவிடப்பட்டோா், பெண்கள், கணவனை இழந்தோா், உதவிகள் தேவைப்படும் முதியோரைக் கொண்டுள்ள இல்லங்களை இயங்கிடலாம்.

நகா்ப்புறங்களில் உள்ள உணவு பதனிடுதல் பிரிவுகள் அதாவது பிரட் உற்பத்தி ஆலைகள், பால் பதனிடும் ஆலைகள், அரவை நிலையங்கள், பருப்பு ஆலைகள் ஆகியன இயங்கலாம். ஏற்றுமதி, இறக்குமதிக்கான சிப்பம் (பேக்கிங்) கட்டும் நிலையங்கள், விதைகள் மற்றும் தோட்டக்கலை சாா்ந்த பொருள்களை கையாளும் நிறுவனங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை சாா்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அமைப்புகள் தொடா்ந்து இயங்கலாம் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments