தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்லைன் மூலமாக மீன் விற்பனை
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை வழங்க ஏதுவாக, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை வழங்க ஏதுவாக, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிரதமா் மோடி ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டாா். இந்த ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள், வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா நோய் தடுப்பினை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் www.meengal.com என்ற இணையளத்தினை பல்வேறு கூடுதல் வசதிகளுடன் பொதுமக்கள் மிக எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி, Meengal என்ற கைபேசி செயலி(App) ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள், தங்களது வீட்டில்இருந்தபடியே மீன்களை ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.