முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள், பெரம்பலூரிலும் முழு ஊரடங்கு

செங்கல்பட்டு மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெவித்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் 29 ஆம் தேதி புதன் இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டத்திலுள்ள தாம்பரம் பெரு நகராட்சி, பல்லாவரம் பெரு நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, மற்றும் பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலாம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம் மற்றும் முட்டுக்காடு (பகுதி) ஆகிய 2 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உள்பட்ட செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் முழுவதிலும் பின்வரும் முடிவுகளை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
1. மேற்சொன்ன பகுதிகளில் 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:
1) மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்.
2) அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
3) இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
4) அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.
5) பொது விநியோகக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள், கிடங்குகள் மற்றும் அவற்றின் சரக்கு போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
6) பெட்ரோல்/டீசல் பங்குகள் காலை 8 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
7) பால் விநியோகம், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், வழக்கம்போல் நடைபெறலாம்.
8) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
9) பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
10) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
11) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
12) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
13) மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

Advertisement

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மாவட்டத்தின் பிற இடங்களில்/பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும்.

இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி
தெளிக்கப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ஜான் லூயிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் பெரம்பலூரைச் சுற்றியுள்ள 8  கி.மீ.  பகுதிகளில் நாளை சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவித்துள்ளார்.

மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது. மேலும் மேற்காணும் தினங்களில் எவ்வித  வாகன போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது. மேலும் இந்த முழு 
ஊரடங்கு காலத்தில் செயல்படும் கடைகள் சீலிடப்படும். தடைக்காலத்தில் நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும் என்றும் சாந்தா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments