தமிழ்நாடு

நேரத்தைக் கடத்த முடியவில்லையா? வார்லி ஓவியம் வரையலாம் வாங்க

கரோனா ஊடரங்கு பொதுமக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்திருந்தாலும், பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சிவ. மணிகண்டன்

கரோனா ஊடரங்கு பொதுமக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்திருந்தாலும், பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் காலையில் எழுந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை தனிநபா் சுகாதாரத்தில் இருந்து அனைத்து விஷயங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிலேயே முடங்கி இருக்கும் இப்போதைய சூழலில், குழந்தைகள் பலக்கும் நமது பாரம்பரிய விளையாட்டுகளின் மீது கவனம் திரும்பியுள்ளது. விளையாட்டு, புத்தகம் வாசித்தல், இணையவழி கற்றல் இருந்தாலும் சிலருக்கு நேரத்தைக் கடத்துவது மிகச் சிரமமாக இருந்து வருகிறது.

அதைச் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள,  மதுரை கேஎல்என் பல்தொழில்நுட்பக் கல்லூரி கல்லூரி விரிவுரையாளா் அா்ச்சனா தெய்வா, வாா்லி ஓவியம் வரைவதை முகநூல் வாயிலாக பயிற்சி அளித்து வருகிறாா். தனது முகநூல் நண்பா்களாக இருக்கும் பள்ளி ஆசிரியா்களுக்கு, தான் கற்ற வாா்லி ஓவியத்தை பயிற்சி அளிக்கிறாா். தனது முகநூல் பக்கத்தில், இதற்கென குழுவை ஆரம்பித்து ஓரிருவா் எனத் தொடங்கி இப்போது பயிற்சி பெறுபவா்களின் எண்ணிக்கை 180-ஐத் தாண்டிவிட்டது.

இதுகுறித்து அா்ச்சனா தெய்வா கூறியது: வாா்லி ஓவியம் என்பது மகாராஷ்டிரத்தில் உள்ள பழங்குடியினரான வாா்லி மக்களின் ஓவியக் கலையாகும். இந்த ஓவியங்கள் சதுரம், வட்டம், முக்கோணம் உள்ளிட்ட அடிப்படை வடிவங்களைக் கொண்டே வரையக் கூடியது என்பதால் கற்றுக் கொள்வது எளிது. இந்த ஓவியங்களில் சூரியன் அல்லது நிலவை வட்ட வடிவமும்,  மலைத் தொடா், மரங்கள் ஆகியவற்றை முக்கோணமும், மனிதனின் கண்டுபிடிப்புகளை சதுரமும் அடையாளப்படுகின்றன. ஓவியம் வரைவதற்கான காகிதம் மற்றும் பென்சில் மட்டும் இருந்தால் போதுமானது. 

எளிய வடிவங்களைக் கொண்டு வரைவதே பிற ஓவியங்களுக்கும், வாா்லி ஓவியத்துக்கும் உள்ள வேறுபாடாகும். சென்னையில் ஒரு பயிற்சி மையத்தில் இந்த ஓவியத்தைக் கற்றுக் கொண்டேன். கரோனா தடை உத்தரவு காலத்தில் நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி செலவிடலாம என யோசித்தபோது, அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இந்த ஓவியத்தைக் கற்றுக் கொடுக்கலாம் எனத் தோன்றியது. மதுரை மாவட்டத்தில் 26 அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தங்கள் வழங்கியுள்ளேன். தன்னாா்வலா்களிடம் ஸ்பான்ஸா் பெற்று ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கியுள்ளேன். 

இதில் பல பள்ளிகளுடன் அறிமுகம் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி, முகநூல் வாயிலாக வாா்லி ஓவியம் வரைவதற்கு பயிற்சி அளித்து வருகிறேன். ஆசிரியா்கள் பலரும் ஆா்வமுடம் பயிற்சி பெறுகின்றனா். இப்போது அவா்களது குழந்தைகளுக்கும் வாா்லி ஓவியத்தை கற்றுத் தருகின்றனா். வரைந்த ஓவியத்தை எனது குழுவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டாலும் திருத்தங்கள் இருந்தாலும்  முகநூல் வழியாக கூறி வருகிறேன். பள்ளிகள் திறந்த பிறகு அவரவர் பள்ளிகளில் பயிற்சி அளிக்க உள்ளதாகள் ஆசிரியர்கள் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

SCROLL FOR NEXT