மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை 778 பேருக்கு தொற்று ஏற்பட்டதுதான் அம்மாநிலத்தில் ஒருநாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக இருந்தது.
இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 811 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,628 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 323ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கரோனா அறிகுறிகள் இல்லாமலே தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.