தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. 

அதேபோன்று அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. முன்னதாக அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயா்வை 2021 ஜூன் வரை நிறுத்தி வைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT