தமிழ்நாடு

மதுரையில் காவலர்களுக்கு கரோனா: தெற்குவாசல் காவல் நிலையம் மூடல்

DIN

மதுரையில் காவலர்களுக்கு கரோனா தொற்றால் தெற்குவாசல் காவல் நிலையம் மூடப்பட்டது.

மதுரை பெருங்குடி சேர்ந்த 47 வயது நபர். இவர் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதேபோன்று பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர். இவர் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பணியாற்றிய தெற்குவாசல் காவல் நிலையம் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. 

மேலும் காவல் நிலையம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையம் வளாகத்தின் அருகில் தற்காலிக பந்தல் போட்டு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT