தமிழ்நாடு

திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன

IANS

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுமார் 573 ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றும்படி தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்திருந்தது.

இதையடுத்து திருச்சி, பெரம்பூர், மதுரை, சேலம் ரயில் பணிமனைகளில் இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை திருச்சி பணிமனையில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பொறுத்துவது, திரைச்சீலைகளைப் போடுவது, குப்பைத் தொட்டிகள் வைப்பது என பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த 44 ரயில் பெட்டிகளும், அவசர காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT