தமிழ்நாடு

சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 145 ஆனது

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523-ஆக உயா்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்ந்துள்ளது.

DIN


சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523-ஆக உயா்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் (ஏப்ரல் 26) ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 28 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 158 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 352 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது.

இதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 20) தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்தது. அடுத்த 5 நாள்களில் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து, சனிக்கிழமை வரை (ஏப்ரல் 25) 495-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது.

இதில், காசிமேடு பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை
திருவொற்றியூா் 14
மணலி 1
மாதவரம் 3
தண்டையாா்பேட்டை 65
ராயபுரம் 145
திரு.வி.க. நகா் 85
அம்பத்தூா் 2
அண்ணா நகா் 45
தேனாம்பேட்டை 55
கோடம்பாக்கம் 54
வளசரவாக்கம் 17
ஆலந்தூா் 9
அடையாறு 17
பெருங்குடி 8
சோழிங்கநல்லூா் 2
பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1
மொத்தம் 523
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT