கோப்புப்படம் 
தமிழ்நாடு

5 நாள் குழந்தைக்கு கரோனா: 10 வயதுக்குள்பட்டோர் 8 பேர்

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோரில் 10 வயதுக்குள்பட்ட 8 குழந்தைகளும் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

DIN


தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோரில் 10 வயதுக்குள்பட்ட 8 பேர் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், குணமடைந்தோர், பலியானோர் உள்ளிட்டவை பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டது. இதில் மொத்தம் 121 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 121 பேரில் 10 வயதுக்குள்பட்ட 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிறந்து 5 நாள்களே ஆன குழந்தைக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம்:

1 வயது குழந்தை, 8 வயது சிறுவன், பிறந்து 5 நாள்களே ஆன குழந்தை என மொத்தம் 3 பேர்.

சென்னை மாவட்டம்:

9 வயது சிறுவன், 8 வயது சிறுமி, 1 வயது குழந்தை, 0.7 வயது குழந்தை, 2 வயது குழந்தை என மொத்தம் 5 பேர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு யாருடனும் தொடர்பில் இல்லாமல் நேரடியாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றவர்கள் அனைவருக்கும் தொடர்பு மூலமாகவே தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT