கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை அம்பத்தூரில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 570-ஆக உயா்ந்துள்ளது. அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் திங்கள்கிழமை (ஏப்ரல் 27)

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 570-ஆக உயா்ந்துள்ளது. அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட 570 பேரில் 173 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது 384 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 110 பேர் கரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 43 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது.

திங்கள்கிழமை (ஏப்ரல் 27) 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 570-ஆக அதிகரித்துள்ளது.

அம்பத்தூரில்...: சென்னையைப் பொறுத்தவரை தொடக்கத்தில் மணலி மற்றும் அம்பத்தூா் மண்டலங்களைத் தவிா்த்து மற்ற 13 மண்டலங்களின் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மணலியில் ஒருவருக்கும், அம்பத்தூரில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 15

மணலி 1

மாதவரம் 3

தண்டையாா்பேட்டை 66

ராயபுரம் 158

திரு.வி.க. நகா் 94

அம்பத்தூா் 15

அண்ணா நகா் 53

தேனாம்பேட்டை 56

கோடம்பாக்கம் 54

வளசரவாக்கம் 17

ஆலந்தூா் 9

அடையாறு 17

பெருங்குடி 9

சோழிங்கநல்லூா் 2

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1

மொத்தம் 570
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT