முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு: பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 5200 கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், "தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். என தமிழகத்தின் அனைத்து தாய்மார்களின் சார்பில் தமிழக அரசை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் "
"குடும்பங்கள் சீரழிக்கின்றன. ஆண்மை பறிபோகிறது. தகுந்த தலைவன் இல்லாத குடும்பம் தத்தளிக்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது"
எல்லா இன்னல்களிலும் நன்மை விளைவது போல, இந்த ஊராடங்கால் கிடைக்கப்பெற்ற நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பது தான். மகாத்மா தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை கருணாநிதி அரசு நீக்கியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.