சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியத் தேவைக்காக இயங்கும் அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகளில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் பணிக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கொள்ளத் தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சில தனியார் நிறுவனங்களுக்கும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.