தமிழ்நாடு

கரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை: காவல்துறை அறிவிப்பு

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 2,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்ககளை பயன்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர், காவல்துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட விரும்புவோர், அந்தந்த மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT