சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 104 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,162 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று சென்னையில் மேலும் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 768 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ், சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று இரு மடங்காகியுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பாதுகாப்பு நலன் கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை அதிக விலைக்கு விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சென்னையில் 114 மெட்ரிக் டன் காய்கறித் தொகுப்புகள் விற்பனை ஆகியுள்ளன' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.