தமிழ்நாடு

பாதுகாப்பில்லாத கூட்டத்தால் கரோனா தொற்று பரவும் அபாயம்

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பாதுகாப்பில்லாத கூட்டத்தால் கரோனா தொற்று பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கடைகளிலும், சாலைகளிலும் பாதுகாப்பில்லாமல், முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். நகராட்சி நிர்வாகமும், காவல் துறையினரும் எத்தனை முறை எப்படிச் சொன்னாலும், அலட்சிப்படுத்தி விடுகின்றனர். முகக்கவசம் அணியாமல், இடைவெளி விட்டு நிற்காமலும், கூட்டம் கூட்டமாக இருப்பதால் கரோனா தொற்று மேலும் பரவி, சமூகப் பரவலாக மாறக் கூடிய அபாய நிலை ஏற்படப் போகும் நிலையை ஏற்படுத்துகின்றனர். 

பக்கத்து மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினத்தில் கூடுதலான தொற்று இருந்தாலும், நடுவில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில், குறைந்த அளவு தொற்று அதிகரித்து விடாமல் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றியது வீணாகிவிடாமல், இருக்க வேண்டுமானால், விலகி நிற்க வேண்டும், வீட்டிலிருக்க வேண்டும். உடனே மாவட்ட நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT