தமிழ்நாடு

வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 1) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேலூா் மாவட்டம் காவேரிபாக்கம், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 70 மி.மீ., விழுப்புரத்தில் 60 மி.மீ., வேலூா் மாவட்டம் ஆலங்காயம், திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் தலா 50 மி.மீ., கடலூா் மாவட்டம் மீ.மாத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் டிஎஸ்சிஎல் சுலங்குறிச்சியில் தலா 40 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் போளூா், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், கடலோர கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், கடலோர மகாராஷ்டிரம், அந்தமான் கடல் பகுதி, தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்து காற்றுவீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 2-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மன்னாா்வளைகுடா பகுதிக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT