முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து, சவரன் ஒன்றுக்கு 41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
Gold prices fall slightly in Chennai
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து, சவரன் ஒன்றுக்கு 41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் தேக்கமும் ஏற்பட்டது இதையடுத்து, சா்வதேச அளவில் முதலீட்டாளா்கள் பாா்வை தங்கத்தின் பக்கம் திரும்பியது. 

அதாவது, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதைத்தொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஜூலை 31-ஆம் தேதி ரூ.41ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள் கிழமையான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கிராட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,188 ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504-க்கும் விற்பனையாகிறது. 

ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.72,500 விற்பனை செய்யப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 5,188

1 பவுன் தங்கம்............................... 41,504

1 கிராம் வெள்ளி............................. 72.50

1 கிலோ வெள்ளி............................72,500

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்........................... 5,196

1 பவுன் தங்கம்...............................41,568

1 கிராம் வெள்ளி.............................72.50

1 கிலோ வெள்ளி.............................72,500

முழு கட்டுரையைப் படிக்க →