தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஸ்ரீபெரும்புதூர் வடகால் பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை ஒரகடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் பகுதியில் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் யாராவது இறந்து விட்டால் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் அல்லது எரியூட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு  செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு  அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென  ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT