முகப்பு
தமிழ்நாடு

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்: ஒரு சவரன் 42 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் ஒரு சவரன் ரூ. 42,408 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
gold rate in chennai
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் ஒரு சவரன் ரூ. 42,408 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தில் இருந்தது.

அதன்பிறகு படிப்படியாக விலை உயா்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து இன்றும் உயர்ந்து சவரனுக்கு ரூ.792 உயா்ந்து, ரூ.42,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.99 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.4.60 குறைந்து, ரூ.77.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.77,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →