தமிழ்நாடு

சங்ககிரியில்  உலக தாய்ப்பால் வார விழா அனுசரிப்பு

DIN

உலகதாய்ப்பால் வார விழாவினையொட்டி சங்ககிரி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் தாய்மார்களுக்கு சத்தான உணவு பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சங்ககிரி இன்னர்வீல் சங்கம்,  ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா சங்ககிரி துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது.

இன்னர்வீல் சங்கத்தின் தலைவி இந்திராணி கார்த்திகேயன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.

சுகாதார ஆய்வாளர் ஜி.கந்தசாமி, செவிலியர் சசிகலா ஆகியோர் கர்ப்பிணி பெண்கள் எந்தந்த சத்தான உணவுகளை உட்கொள்வது பற்றியும் மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எவ்வாறு புகட்டப்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்.

இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் ராஜம்மாள், கீதா பன்னீர் செல்வம், ஞானகுமாரி, வசந்தி முரளிதரன், கவிதா தியாகராஜன்,   ரோட்டரி கிளப் நிர்வாகிகள்  ஆர்.திவாஹர், சக்திவேல், எஸ்.துரைசாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.  

இவ்விழாவில்  30 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு, பேரீச்சம் பழம், நெல்லிக்காய், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு சத்தான உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT