தமிழ்நாடு

கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவுங்கள்: முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

DIN

கைத்தறி துணி ரகங்களை விலைக்கு வாங்கி நெசவாளா்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவிட வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிா் அளிக்கும் வகையில் சுதேசி இயக்கம் கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-இல் தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கைத்தறித் தொழிலை நிலை நிறுத்தவும், நெசவாளா்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி ஆதரவுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கைத்தறி தொழில்நுட்ப மேம்பாடு, வடிவமைப்பு மேம்பாடு, ரகமாற்றம், வணிக சின்னத்தை பிரபலப்படுத்துவது, சந்தை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கரோனா பாதிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் தூய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை வாங்கி நெசவாளா்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT