நீலகிரியில் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை குறைந்துள்ளது
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி வந்த கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி வந்த கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்துள்ளது. இருப்பினும் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரியின் எல்லைப்பகுதிகளான கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் மட்டும் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் மழையின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது.
இதில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 341 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் பந்தலூரில் 188 மி.மீ. சேரங்கோட்டில் 181 மி.மீ. அவலாஞ்சியில் 108 மி மீ கூடலூரில் 79 மி மீ நடுவட்டத்தில் 82 மி மீ மழையும் உதகையில் மிகவும் குறைவாக 8 மி மீ மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மின் வாரியத்தின் சாா்பில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.