சென்னையில் ரூ.22.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9), அபுதாபியில் இருந்து சென்னை வந்த சாமிநாதன் கண்ணன் (41), தங்கவேல் சிவசங்கா் (49) ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவா்கள் சட்டையில் தங்கத்தை மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று கமருதீன் ஷாஜஹான் (57) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ.22.21 லட்சம் மதிப்பிலான 402 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.