முகப்பு
தமிழ்நாடு

43 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது ஒரு சவரன் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சிறிது குறைந்து 43 ஆயிரத்துக்குக் கீழ்  விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
gold rate in chennai
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சிறிது குறைந்து 43 ஆயிரத்துக்குக் கீழ்  விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. 

ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், ஜூலை 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும், 
ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. 

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.27 குறைந்து ரூ.5358-க்கும், ஒரு சவரன் ரூ.216 குறைந்து ரூ.42,864-க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.82.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.82,600 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 5,358

1 சவரன் தங்கம்............................... 42,864

1 கிராம் வெள்ளி............................. 82.60

1 கிலோ வெள்ளி............................82,600

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்........................... 5,385

1 சவரன் தங்கம்...............................43,080

1 கிராம் வெள்ளி.............................83.40

1 கிலோ வெள்ளி.............................83,400

முழு கட்டுரையைப் படிக்க →