முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்: கே.பி. முனுசாமி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
முதல்வர் வேட்பாளர் யார்? உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்: கே.பி. முனுசாமி
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியதாவது, தலைமைக் கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவே தற்போது ஆலோசனை நடத்தினோம். நாடாளுமனற் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது.

பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று யார் சொன்னது? அந்த கட்சியின் தமிழக தலைவர் சொன்னாரா? அல்லது சொன்னவருக்கு அந்த அதிகாரத்தை கட்சி கொடுத்துள்ளதா? அவ்வாறு சொன்ன வி.பி. துரைசாமி தற்போது ஒரு கட்சியில் உள்ளார், முன்பு வேறு ஒரு கட்சியில் இருந்தார். தற்போதைய கூட்டணி நீடிப்பதாக பாஜக தமிழக தலைவர் முருகன் உறுதி செய்துள்ளார். எனவே முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →