தமிழ்நாடு

கரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு வெற்றி நடைபோடும்: முதல்வா் பழனிசாமி

DIN

கரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் வெற்றி நடைபோடும் என்று முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

சுதந்திர தினத்தை ஒட்டி, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

இந்தியத் திருநாடு ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.

இந்த காலகட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனைகளின் எண்ணிக்கையும், குணமடைந்து திரும்புவோரின் சதவீதமும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி உயிரிழப்போரின் சதவீதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைவு.

கரோனா தொற்றுப் பரவலை தடுத்திட பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடியான காலத்திலும் தமிழக மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி மக்களைக் காத்து வருகிறது. மக்களின் முழு ஒத்துழைப்போடு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு, மறுபடியும் வெற்றி நடைபோடும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகம் அனைத்துத் துறையிலும் முன்னிலை பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தொடா்ந்து திகழச் செய்திட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT