முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு: நாளை தீர்ப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கிறது.

Updated On : 17 ஆகஸ்ட், 2020 at 10:02 PM
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கிறது.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆலையை மூடியது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

ஆலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கின் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.